Friday, May 6, 2016

சன் செஷன் எடுப்பது எப்படி?

சண் செஷன் செய்வது எப்படி:
கொழுப்பு உணவு எடுத்த பின் இதை செய்ய வேண்டும். அல்லது பத்து கிராம் வெண்ணையோ தேங்காய் எண்ணையோ சாப்பிட்டு செய்யவும். தினமும் காலை 11.30முதல் 12.30மணி சரியான நேரம் ஆகும். UV கண்ணாடி அணிய வேண்டும். தலைக்கு தொப்பி. மொட்டை மாடியில், கட்டில் போட்டு, கீழே உள்ளவாறு செய்ய வேண்டும். ஒருவர் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து குப்புற படுத்திருந்தார் என்றால், வெயில் முதுகில் மட்டும் தான் படும். அப்போது 41%உடம்பை எக்ஸ்போஸ் செய்கிறார் என அர்த்தம். வெயில் ஒரு பக்க உடம்பை மட்டும் தான் அடிக்கும். மறுபக்கம் நிழல் தான்.
http://biology-forums.com/gallery/14755_16_09_12_5_59_02_87711823.jpeg
பனியன் ஷார்ட்ஸ் அணிந்து மாடியில் படுத்திருந்தால்- உடம்பின் 20% சூரியனில் வெளிப்படும்.
வெறும் ஷார்ட்ஸ் மட்டும்-36%
பனியன் பேன்ட்-10%
ஸ்லீவ்லெஸ் நைட்டி-10%
எத்தனை பர்சன்ட் எக்ஸ்போஸ் செய்கிறீர்கள் என இதை Dminder appல் போடவும். தினமும் 10000யூனிட் என்பதே நம் லட்சியம்.



No comments:

Post a Comment