Friday, May 6, 2016

High BP

High BP, Fluctuating Uric acid, 
பிரஷர் குறைய நான் வைட்டமின்  சி மாத்திரையும், மெக்னிசியமும் பரிந்துரைக்கிறேன். . 
Solaray - Magnesium Glycinate 400 mg. - 120 Vegetarian Capsules-night one tablet before food


  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • தினமும் அரைமணி நேரம் நடக்கவும்.
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • ஒரு  நாளைக்கு நான்கு டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • இரும்பு சட்டியில் மட்டுமே சமையுங்கள்.
  • காலை- பாதாம் 100. 12 மணி  நேரம் நீரில் ஊற  வைத்து, வடிகட்டி, , உப்பு, மிளகுதூள்  போட்டு வெண்ணையில் வறுக்கவும். (no butter tea. Magnesium in badam)
  • ஒரு நேந்திரம் பழத்தை வேகவைத்து, வெண்ணையில் வதக்கி சாப்பிடவும்.
  • மதியம் பனீர்-125 கிராம்
  • இரவு  மூணு  முட்டை , செடார் சீஸ் வேண்டாம்
  • ஒரு நாளைக்கு 300கிராம் காய்கறி. ஒரு நாளைக்கு  மினிமம் மூன்று காய்கறிகள். முட்டையுடனோ  அல்லது பனிருடனோ சாபிடுங்கள். பிரித்தும் சாப்பிடலாம்.
  • கீரை ஸ்முதி - 150 கிராம் தினமும். எதாவது
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -1 இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு (இரவு) சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது
  • மலச்சிக்கலுக்கு நாட்டு  மருந்து கடைக்குப் போய் கடுக்காய் வாங்க  வேண்டும். அதைப் பொடிக்க வேண்டும். இரவு ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அது கொதிக்கும் போது கால் டீஸ்பூன் கடுக்காய் பொடி போட்டு இறக்கி ஆறவைத்து குடிக்க வேண்ட்டும். பொறுமையாக அரை டீஸ்பூன் அல்லது  ஒரு டீஸ்பூன் எனவும் உயர்த்தலாம். கொய்யா காயும் நல்லது.
  • இந்த உணவுகளை காலை மதியம் இரவு என மாற்றிக் கூட சாப்பிடலாம்.
  • flax seed-20 கிராமை வெண்ணையில் வறுத்து போடி செய்து உணவின் மேல் தூவி சாப்பிடலாம். அல்லது நீரில் கரைத்தும் குடிக்கலாம்.
  • kefir-150 ml போதும்
  • இதில் உங்களுக்கு வெயிட் குறையாது.
  • நேந்திரத்தை விட பாதாம் சிறந்தது என்பதால், நேந்திரம் வேண்டாம்.
  • ஒரு இளநீரை நான்காக பிரித்து குடிக்கவும், தக்காளி சாஸ் செய்து இரண்டு ஸ்பூன்கள் உணவிற்கு தொட்டுக் கொள்ளவும்-பிரஷர் குறைய.

No comments:

Post a Comment