Friday, May 6, 2016

Lp(a) increased. Otherwise Normal-Maintainance diet

Pure vegetarian,  Weight  gain diet. Only Lp(a) increased, Iron low, Low HDL

ht-172                   wt-59
  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • எக்சர்சைஸ் யோகா  அரை மணி முதல் முக்கால் மணி வரை.
  • 100ml பால்  சேர்த்த  காபி/டி -இரு  முறை.
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • 20gram butter -சமையலுக்கு  
  • காலை- பாதாம் 75. 12 மணி  நேரம் நீரில் ஊற  வைத்து, வடிகட்டி, , உப்பு, மிளகுதூள்  போட்டு வெண்ணையில் வறுக்கவும்.
  • கீரை ஸ்முதி - 100 கிராம் தினமும் (உங்களுக்கு பிடித்த அல்லது கிடைக்கும் ஏதாவது ஒரு கீரை வாங்கி உப்பிட்டு  வேக வைத்து மிக்சியில் அடித்து குடிக்கவும்)
  • இரும்பு பாத்திரத்தில் மட்டுமே சமையல் செய்யவும்.
  • மதியத்தில். காலிபிளவர் 200கிராம் grate செய்து இட்லி தட்டில் போட்டு வேக வைத்து தினமும் தயிர் அல்லது புளி இல்லா ரசத்துடன் சாப்பிடலாம்..
  • மொத்தம் 200 கிராம் காய்கறி (வெங்காயம்-2, தக்காளி-4, கேப்சிகம்-1). சமைத்த பின் காய்கறி மேல் Flax seed-20g-வறுத்து  பொடித்து  உணவு  மேல்  தூவி  சாப்பிடவும்.
  • மதியம்-பட்டர் டி. 15 கிராம் வெண்ணை + அரை டம்ளர் பால் + அரை டம்ளர் நீர் டி அல்லது காபி பொடியுடன் சூடு செய்து. குடிக்கவும்.
  • இரவு பனீர் 200 கிராம் பனீர் சமைத்து சாப்பிடலாம்.  
  • சன்செஷன் செய்ய வேண்டும்
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -1 இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு (இரவு) சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது
·         இந்த உணவுகளை காலை மதியம் இரவு என மாற்றிக் கூட சாப்பிடலாம்.
·         பசித்தால் தேங்காய் சாப்பிடலாம்.
·         கொய்யா காய் தேவைப்பட்டால் சாப்பிடலாம்.
·         இந்த lp(a) என்பது இதயத்தில் அடைக்கும் கொழுப்பாகும். இது எந்த  கெட்டப் பழக்கம், வியாதி இல்லாதவருக்கும் வரலாம். முழுக்க முழுக்க இது மரபணு சம்பந்தப்பட்டது. ஆனால் பேலியோ டயட் மற்றும் சில மருந்துகள் மூலம் இதை குறைக்க முடியும். கீழ்கண்ட டேப்லட்களை தினமும் ஒன்று காலையில் உணவிற்கு பின் எடுக்கலாம். ஒரு மாதம் கழித்து டெஸ்ட் எடுத்து அதிகரிக்க வேண்டும். கீழே கொடுத்திருப்பது தினமும் நாம் அன்றாடம் உணவில் எடுக்கும் VIt C மற்றும் புரதத்தில் இருக்கும் Lysine. இதை எடுப்பதால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. ஒமேகா 3 எண்ணை மீனில் இருக்கும் Lp a வைக் குறைக்கும் எண்ணை யாகும்.
1. Source Naturals-L-Lysine Free Form 1000 mg. - 100 Tablets
2. Source Naturals- Systemic C Enhanced Non-Acidic Vitamin C 1000 mg. - 100 Tablets
3. LuckyVitamin-Omega-3 Fish Oil Extra Strength 1000 mg. - 120 Softgels
இதை வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பரை தருவிக்க சொல்லலாம் அல்லது நெட்டில் வாங்கலாம்.. இரண்டு மாதங்களுக்கு இது வரும். இந்த Lp(a) நார்மலுக்கு வரும் வரை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இந்த டயட்டில் மெதுவாக ஆனால் ஆரோக்கியமாக உங்கள் எடை அதிகரிக்கும். அடுத்த மாதம் இன்னும் அதிகமாக்கலாம்.


No comments:

Post a Comment